கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - மத்திய சுகாதார அமைச்சகம் வெளியீடு


கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - மத்திய சுகாதார அமைச்சகம் வெளியீடு
x
தினத்தந்தி 13 Sept 2020 3:05 PM IST (Updated: 13 Sept 2020 3:05 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி

* கொரோனாவிலிருந்து குணமடைந்த பின்பும் வெளியே செல்லும் போது முகக்கவசம் பயன்படுத்துதல், சமூக விலகலைக் கடைபிடித்தல், கைகளை சுத்தமாகப் பராமரித்தல் போன்றவற்றை செய்ய வேண்டும்.

*  வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது.

 *  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்தை எடுத்துக் கொள்ளவது.

 *  கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

 *  உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

 * வீட்டில் இருக்கும் உடல் வெப்பநிலை குறித்து அவ்வப்போது பரிசோதனை செய்தல், ரத்த அழுத்தப்பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடலில் ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுதல் அவசியம்.

 * தொடர்ந்து வறட்டு இருமல், தொண்டை கட்டு போன்றவை இருந்தால், ஆயுஷ் மருத்துவர்கள், அல்லது அலோபதி மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுக்கலாம். அல்லது ஆயுஷ் மூலிகைப் பொடிகள் மூலம் நீராவி பிடிக்கலாம், தொண்டையில் நீர் படுமாறு வாய் கொப்பளிக்கலாம்.

 * நாள்தோறும் காலையில் இளம் சடுநீர், அல்லது பாலில் சவன்பிராஷ் மருந்தை கலக்கி பருகலாம்.

  * கொ ரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் சவன்பிராஷ் லேகியம் சாப்பிடுவது ஆயுஷ் மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

. * கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் தங்களின் அனுபவங்களை உறவினர்களிடம், நண்பர்களிடம் பகிர்ந்து சாதகமான சூழல்களை உருவாக்கி நம்பிக்கை ஏற்படுத்தலாம்.

 * சமூகவலைத்தளத்திலும் தனது கொரோனா அனுபவங்களை விளக்கி எழுதி சமூகத்தில் நம்பிக்கை அளிக்கலாம்.

 * கொரோனாவிலிருந்து குணமடைந்தபின் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சுயஉதவிக் குழுக்கள், தகுதியான மருத்துவர்கள், மருத்துவ, மனநல பயிற்சியாளர்கள் ஆலோசனைகளை உதவிகளைப் பெறலாம்.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story