மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்


மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்
x
தினத்தந்தி 14 Sept 2020 10:54 PM IST (Updated: 14 Sept 2020 10:54 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில் இன்று புதிதாக 3,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதேபோல், இன்று தொற்று பாதிப்பால் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.  மாநிலத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 05 ஆயிரத்து 919- ஆக உள்ளது. 

தொற்றில் இருந்து 1 லட்சத்து 78 ஆயிரத்து 223 பேர் குணம் அடைந்த நிலையில், 23 ஆயிரத்து 693 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் இதுவரை 4 ஆயிரத்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை மேற்கு வங்காள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

அதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில்  இன்று மட்டும் 1,730-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் அம்மாநிலத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 04 ஆயிரத்து 138 ஆக உயர்ந்துள்ளது. 

 தொற்றில் இருந்து 86 ஆயிரத்து 162 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 16 ஆயிரத்து 726 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர். ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பால்  இதுவரை 1,250-பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story