தேசிய செய்திகள்

ஆக்ராவில் உள்ள 'முகலாய' அருங்காட்சியகத்திற்கு சத்ரபதி சிவாஜியின் பெயர்-உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் + "||" + UP CM Yogi Adityanath says Mughals not ideal for Indians; renames Agra museum after Chhatrapati Shivaji

ஆக்ராவில் உள்ள 'முகலாய' அருங்காட்சியகத்திற்கு சத்ரபதி சிவாஜியின் பெயர்-உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

ஆக்ராவில் உள்ள 'முகலாய' அருங்காட்சியகத்திற்கு சத்ரபதி சிவாஜியின் பெயர்-உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆக்ராவில் உள்ள 'முகலாய' அருங்காட்சியகத்திற்கு மராட்டிய வீரர் சத்ரபதி சிவாஜியின் பெயர் சூட்டினார்.
புதுடெல்லி: 

ஆக்ராவில் உள்ள 'முகலாய' அருங்காட்சியகத்திற்கு மராட்டிய போர்வீரர் சிவாஜியின் பெயரை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சூட்டினார். மேலும் அவர் கூறும்போது.

இந்தியர்களுக்கு 'முகலாயர்களை ஒரு சிறந்தவர்களாக பார்க்க முடியாது' எனவே, சிவாஜி போன்ற இந்திய வீரர்கள் மக்களிடையே தேசியவாதத்தையும் தேசபக்தியையும் வளர்க்க ஊக்குவிக்கப்பட வேண்டும்.

"அடிமைத்தனத்தின் மனநிலையின் அடையாளங்களைத் தவிர, தேசத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயங்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. முகலாயர்கள் எங்கள் முன்மாதிரியாக இருக்க முடியாது. தேசியவாதத்தின் கருத்துக்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். சத்ரபதி சிவாஜி மகாராஜ் எங்கள் ஹீரோ எனகூறினார்.

ஆக்ரா முகலாய அருங்காட்சியகத்தின் கட்டுமானம் 2016 இல் தொடங்கியது. 5.9 ஏக்கர் நிலப்பரப்பில் நடை பெற்று வரும் இந்த திட்டம் 2017 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கட்டுமானப் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.இந்த பணியை மாநில சுற்றுலாத் துறை செய்து வருகிறது.

தாஜ்மஹாலின் கிழக்கு வாசலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அருஙாட்சியக  திட்டபணிகளை முதல்வர் ஆதித்யநாத் நேற்று ஆய்வு செய்தார். 

'முகலாய' அருங்காட்சியகத்திற்கு மராட்டிய போர்வீரர் சிவாஜியின் பெயரை யோகி ஆதித்யநாத்துக்கு மராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஹத்ராஸ் வழக்கு: யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக பொய் சொல்ல ரூ .50 லட்சம் -உத்தரபிரதேச போலீசார்
ஹத்ராஸ் வழக்கு: யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக பொய் சொன்னதற்காக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ .50 லட்சம் வழங்கப்பட்டதுபோலி செய்திகள் வைரலாகின
2. வளர்ச்சியை விரும்பாதவர்கள்தான் கலவரத்தைத் தூண்டுகிறார்கள்: யோகி ஆதித்யநாத்
வளர்ச்சியை விரும்பாதவர்கள்தான் கலவரத்தைத் தூண்டுகிறார்கள் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
3. பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்புக்கு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு
பாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
4. மசூதி நிலத்தில் நடைபெறும் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஆதித்யநாத்தை அழைப்போம்- சன்னி வக்பு வாரியம் தகவல்
மசூதி நிலத்தில் நடைபெறும் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஆதித்யநாத்தை அழைப்போம் என்று சன்னி வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.