டெல்லியில் இன்று மேலும் 4,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


டெல்லியில் இன்று மேலும் 4,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 15 Sep 2020 2:41 PM GMT (Updated: 15 Sep 2020 2:41 PM GMT)

டெல்லியில் இன்று மேலும் 4,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

துடெல்லி,

டெல்லியில் முதலில் அதிகரித்து, பின்னர் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 4,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,25,796 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,806 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கொரோனா தொற்றில் இருந்து இன்று 3,081 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனா பாதிபில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,91,203 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது வரை 29,787 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story