எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்திய ராணுவம் பதிலடி


எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்திய ராணுவம் பதிலடி
x
தினத்தந்தி 15 Sept 2020 9:30 PM IST (Updated: 15 Sept 2020 9:30 PM IST)
t-max-icont-min-icon

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

ஸ்ரீநகர்,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அத்து மீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த சில தினங்களாக பாகிஸ்தானின் அத்துமீறல் சம்பவம் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் இன்று காஷ்மீரில் உள்ள சுந்தர்பானி பகுதியில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அந்நாட்டு ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவத்தின் சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் போது சில வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Next Story