தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று + "||" + Union Minister Nitin Gadkari Tests Coronavirus Positive, Isolates Himself

மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று

மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று
மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று பாதிப்புக்கு எந்த ஒரு தரப்பினரும் தப்பவில்லை. மாநில முதல் மந்திரிகள், மந்திரிகள், மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் என மக்கள் பிரதிநிதிகளும் கொரோனா தொற்று பாதிப்பு ஆளாகி வருகின்றனர். 

 உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட 7 மத்திய அமைச்சர்கள் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தனக்கு கொரோனா தொற்று இருப்பதை டுவிட்டரில் பதிவிட்டுள்ள நிதின் கட்காரி, பதிவில் கூறியிருப்பதாவது:- “ நேற்று நான் மிகவும் பலவீனமாக உணர்ந்தேன். எனவே, எனது மருத்துவரிடம் பரிந்துரையின் பேரில் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டேன். இதில் எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நலமாக இருக்கிறேன். என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்.  சமீப காலங்களில் என்னை சந்தித்தவர்கள்  கவனமாகவும் மருத்துவ நடைமுறைகளையும் பின்பற்றி நலமாக இருக்குமாறு வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு- இன்று ஒரே நாளில் 6,477 -பேருக்கு தொற்று
கேரளாவில் இன்று ஒரே நாளில் 6,477 -பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 299 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 299 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
3. மராட்டியத்தில் மேலும் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா, பொருளாதார மீட்பில் இந்தியா-மாலத்தீவுகள் இணைந்து செயல்படும்-பிரதமர் மோடி சொல்கிறார்
கொரோனா, பொருளாதார மீட்பில் இந்தியா-மாலத்தீவுகள் இணைந்து செயல்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.