ராணுவத்தில் 16 ஆயிரத்து 758 பேருக்கு கொரோனா பாதிப்பு


ராணுவத்தில் 16 ஆயிரத்து 758 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 16 Sep 2020 5:13 PM GMT (Updated: 2020-09-16T22:43:45+05:30)

ராணுவத்தில் 16 ஆயிரத்து 758-பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை முறையே 16 ஆயிரத்து 758, ஆயிரத்து 365 மற்றும் ஆயிரத்து 716 ஆக உள்ளதாக, மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். 

மேலும், இராணுவம் மற்றும் விமானப்படையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 32 மற்றும் 3 மற்றும் கடற்படையில் யாருமில்லை என்றும் அவர் குறிபிட்டார். 


Next Story