கொரோனா பாதிப்பால் 382 மருத்துவர்கள் உயிரிழப்பு: இந்திய மருத்துவ சங்கம்


கொரோனா பாதிப்பால் 382 மருத்துவர்கள் உயிரிழப்பு: இந்திய மருத்துவ சங்கம்
x
தினத்தந்தி 16 Sept 2020 11:54 PM IST (Updated: 16 Sept 2020 11:54 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பால் 382 மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள இந்திய மருத்துவ சங்கம், தேசிய ஹீரோக்களை அரசு கைவிடுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் குறித்து பாராளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், பணியின் போது உயிரிழந்த மருத்துவர்கள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த இந்திய மருத்துவ சங்கம், கொரோனா தொற்று பாதிப்பால் 382 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

இது குறித்து இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “  மருத்துவர்கள்,  செவிலியர்கள், சுகாதார பணியாளர்களின் நோய் பாதிப்பு மற்றும்  உயிரிழப்பு ஆகியவை மறைக்கப்பட்டுள்ளது. இது அவசியமற்றது என நினைப்பது போல தோன்றுகிறது.  இந்தியாவை போல எந்த நாட்டிலும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்து இருக்க மாட்டார்கள். -

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் சுகாதார பணியாளர்கள் மருத்துவர்கள் பற்றிய தகவலை மத்திய அரசு பராமரிக்காவிட்டால்,  1897 பெருந்தொற்று சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தை நிர்வகிக்கும் தார்மீக அதிகாரத்தை  இழக்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story