நாடாளுமன்ற மேலவையில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்; அவை நாளை காலை வரை ஒத்திவைப்பு


நாடாளுமன்ற மேலவையில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்; அவை நாளை காலை வரை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 18 Sep 2020 8:58 AM GMT (Updated: 18 Sep 2020 9:19 AM GMT)

நாடாளுமன்ற மேலவையில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பின் அவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று இரு அவைகளிலும் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.  மக்களவையில், காங்கிரஸ் எம்.பி. கே. சுரேஷ், கேரளாவில் மாநில யூனியன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களின் போராட்டத்தில் போலீசார் நடத்திய தடியடி விவகாரத்தில் அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை வழங்கினார்.

இதேபோன்று மேலவை இன்று கூடியதும், எம்.பி. அசோக் கஸ்தி மறைவுக்கு அவை தலைவர் வெங்கய்யா நாயுடு இரங்கல் தெரிவித்து பேசினார்.  இதன்பின்பு, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பூஜ்யநேர நோட்டீஸ் வழங்கினர்.  பா.ஜ.க. எம்.பி. அசோக் பாஜ்பாய், காணாமல் போன குழந்தைகள் விவகாரத்தில் பூஜ்யநேர நோட்டீஸ் வழங்கினார்.

வெங்காய ஏற்றுமதி தடைக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்காக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பூஜ்யநேர நோட்டீஸ் வழங்கினார்.

இந்த சூழலில், மேலவையில் ஹோமியோபதி மத்திய கவுன்சில் (திருத்த) மசோதா 2020 மற்றும் மந்திரிகளுக்கான சம்பளம் மற்றும் படிகள் (திருத்த) மசோதா 2020 உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன்பின்னர் நாடாளுமன்ற மேலவை நடவடிக்கைகள் நாளை காலை 9 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

Next Story