பொது முடக்கத்தால் ஊடகம், பொழுதுபோக்கு துறைக்கு பாதிப்பு - மக்களவையில் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

x
தினத்தந்தி 18 Sep 2020 6:42 PM GMT (Updated: 18 Sep 2020 6:42 PM GMT)

கொரோனா பெருந்தொற்று மற்றும் பொது முடக்கத்தின் காரணமாக இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாக, மக்களவையில், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

திமுக உறுப்பினர்கள் தனுஷ் குமார் மற்றும் அண்ணாதுரை உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், கிரிசில் அமைப்பின் அறிக்கையின்படி கொரோனா பெரும் தொற்றின் காரணமாக இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையினுடைய வருவாய் சுமார் 16% அளவுக்கு வீழ்ச்சி அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

Next Story