தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் 9 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது + "||" + NIA arrests 9 suspected Al Qaeda operatives for ‘planning terror attacks’

மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் 9 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது

மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் 9 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது
மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் 9 அல்-கொய்தா தீவிரவாதிகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி, 

தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 9 அல் கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இந்த தேடுதல் பணியானது மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்திலும், கேரளாவில் எர்ணாகுளத்திலும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் ஆறு பேரும், கேரளாவில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாநிலங்களுக்கு உள்ளே முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து என்.ஐ.ஏ தெரிவிக்கையில், “டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், ஜிஹாதி இலக்கியம், கூர்மையான ஆயுதங்கள், நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உடல் கவசம், வீட்டில் தயாரிக்கக்கூடிய வெடிக்கும் சாதனங்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கட்டுரைகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை இவர்கள் வசம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. காட்டுத்தீ போல பரவுகிறது கொரோனா வைரஸ்- கேரள முதல்வர் பினராயி விஜயன் வேதனை
கேரளாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 7 ஆயிரத்து 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
2. பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் மேற்கு வங்காள மக்களுடன் உரை
பிரதமர் மோடி இன்று காணொலி காட்சியின் மூலம் மேற்கு வங்காள மக்களுடன் உரையாற்ற உள்ளார்.
3. மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: பா.ஜனதா கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சி விலகல்
மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சியாக கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா விலகியது.
4. மெய்நிகர் முறையில் மேற்கு வங்காள துர்கா பூஜை கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி உரை
மேற்கு வங்காள துர்கா பூஜை கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி மெய்நிகர் முறையில் உரை நிகழ்த்த உள்ளார். இந்த உரையை 10 பந்தல்களில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
5. கடந்த 4 வாரங்களில் கேரளாவில் செயலில் உள்ள கொரோனா பாதிப்புகள் 233% அதிகரித்துள்ளன.
கடந்த நான்கு வாரங்களில் இந்தியாவின் செயலில் உள்ள கொரோனா பாதிப்புகள் 11% குறைந்துள்ளன