கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தை முன்கூட்டியே முடிக்க பரிசீலனை?
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி,
நாடு கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் வேளையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இரு சபைகளும் தினமும் 4 மணி நேரம் கூடுகின்றன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான வார விடுமுறை இன்றி சபைகள் இயங்குகின்றன.
கொரோனா காலத்துக்கு ஏற்ற வகையில் இருக்கை வசதிகள் தனிமனித இடைவெளியை பின்பற்றத்தக்க வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். நாடாளுமன்ற அதிகாரிகள், ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் தினந்தோறும் துரித ஆன்டிஜன் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் 25-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
மேலும் மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, பிரகலாத் படேல் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருந்த நிலையில் பாதிப்புக்கு ஆளானார்கள்.
16-ந் தேதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. பல்லி துர்காபிரசாத் ராவ் (திருப்பதி தொகுதி), கொரோனாவால் சென்னை ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடக்கூடும் என்ற அச்சம், எம்.பி.க்கள் மத்தியில் பரவலாக காணப்படுவதாக தெரிகிறது.
எனவே அக்டோபர் 1-ந் தேதி முடிய உள்ள நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்து விடலாம், திட்டமிட்டபடி 18 நாட்களுக்கு நடத்த தேவையில்லை என்ற எண்ணத்துக்கு எதிர்க்கட்சிகள் வந்துள்ளன. இது தொடர்பாக அவை, அரசிடம் தெரிவித்து விட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அதைத் தொடர்ந்து மத்திய அரசும் இதை பரிசீலிக்க தொடங்கி இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இருந்தபோதிலும், இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர் அனைத்து அரசியல் கட்சிகளையும் கலந்து பேச மத்திய அரசு எண்ணியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் 11 அவசர சட்டங்களுக்கு பதிலாக முறையான சட்ட மசோதாக்களை இரு சபைகளிலும் நிறைவேற்றி விட வேண்டும் என்பதுவும் மத்திய அரசின் திட்டமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே விவசாயம் தொடர்பான 3 அவசர சட்டங்களுக்கு பதிலாக கொண்டு வரப்பட்ட மசோதாக்களுக்கு மக்களவை ஒப்புதல் அளித்து உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்துக்கு நிதி திரட்டுவதற்காக எம்.பி.க்கள் சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதா, இரு அவைகளிலும் நிறைவேறி இருக்கிறது. எஞ்சிய மசோதாக்கள் நிறைவேற வேண்டி இருக்கிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தை முன்கூட்டியே முடிப்பது தொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்து மத்திய அரசு அடுத்த சில நாட்களில் முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story