கொரோனா பாதிப்பு குறித்து வரும் 23 ஆம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை


கொரோனா பாதிப்பு குறித்து வரும் 23 ஆம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
x
தினத்தந்தி 20 Sept 2020 8:30 AM IST (Updated: 20 Sept 2020 8:30 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி 23 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். நாட்டில் தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராத சூழலில், தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் 7 மாநில முதல்வருடன் பிரதமர் மோடி வரும் 23 ஆம் தேதி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. 

 டெல்லி, மராட்டியம் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.  நேற்று (சனிக்கிழமை) நிலவரப்படி இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 93 ஆயிரமாக இருந்தது.  மொத்த பாதிப்பு 53 லட்சத்தை கடந்துள்ள நிலையில், பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

முன்னதாக கடந்த மாதம் பிரதமர் மோடி, சில மாநில முதல் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நாட்டில் உள்ள 10 மாநிலங்களில் தொற்று பரவலை கட்டுப்படுத்தினால், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில்  இந்தியா வெல்லும் என குறிப்பிட்டு இருந்தார். 

Next Story