இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சமாக உயர்வு


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சமாக உயர்வு
x
தினத்தந்தி 20 Sep 2020 4:25 AM GMT (Updated: 2020-09-20T09:55:04+05:30)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 92,605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 92,605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மேலும் 1,133 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டி, 54,00,620 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 10 லட்சத்து 10 ஆயிரத்து 824 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 43 லட்சத்து 03 ஆயிரத்து 044 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 86 ஆயிரத்து 752 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நாடு முழுவதும் புதிய அதிகபட்ச அளவாக நேற்று 12,06,806 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதன்மூலம் இதுவரை 6 கோடியே 36 லட்சத்து 61 ஆயிரத்து 060 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.

Next Story