2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவது நிறுத்தமா? நிதி அமைச்சகம் பதில்
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவது நிறுத்தமா? என்பது தொடர்பான கேள்விக்கு மத்திய நிதி இணை அமைச்சர் அனுராக் தாகூர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
புதுடெல்லி,
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவதை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். சந்திரசேகர் என்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்த அவர், இதனை தெரிவித்துள்ளார்.
அதேசமயம் கொரோனா பரவலின் காரணமாக, ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டதாக கூறினார். தற்போது ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணியை, அச்சகங்கள் படிப்படியாக தொடங்கியுள்ளதாக, அனுராக் தாக்கூர் கூறினார்.
Related Tags :
Next Story