கொரோனா அச்சுறுத்தல்: ராஜஸ்தானில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்


கொரோனா அச்சுறுத்தல்: ராஜஸ்தானில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்
x
தினத்தந்தி 20 Sept 2020 11:40 AM IST (Updated: 20 Sept 2020 11:40 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் ராஜஸ்தானில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜெய்பூர்,

ராஜஸ்தானில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், அம்மாநிலத்தில் 11 மாவட்டங்களில்  144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜெய்பூர், ஜோத்பூர், கோடா, ஆஜ்மீர், அல்வார், பைல்வாரா, உதய்பூர், சிகார், பாலி மற்றும் நாகவூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 5 நபர்களுக்கு மேல் ஒன்றாக கூட தடை இருக்கும்.

வரும் 23  ஆம் தேதி கொரோனா தொற்று அதிகம் பாதித்த 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இத்தகைய சூழலில், ராஜஸ்தான் கெடுபிடிகளை அதிகரித்துள்ளது. அதேபோல், வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் உள்பட பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Next Story