தாஜ்மாகால் சுற்றுலாப் பயணிகளுக்காக 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு


தாஜ்மாகால் சுற்றுலாப் பயணிகளுக்காக  6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 21 Sept 2020 8:15 AM IST (Updated: 21 Sept 2020 8:15 AM IST)
t-max-icont-min-icon

6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மகால் சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுவதற்காக மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளது.

ஆக்ரா,

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 17- ஆம் தேதி தாஜ்மகால் மூடப்பட்டது. தற்போது ஊரடங்கில் இருந்து மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது.  செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து அன்லாக்-4 என்ற அடிப்படையில் பல்வேறு தளர்வுகள் அளித்துள்ளது இந்நிலையில் செப்டம்பர் 21-ந்தேதியில் (இன்று) இருந்து சுற்றுலா பயணிகளுக்காக தாஜ்மகால் திறக்கப்பட்டுள்ளது. 

தாஜ்மகால் வருபவர்கள்  சமூக இடைவெளி, சானிடைசரால் கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  தாஜ்மகாலை காண வரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று, ஆன்-லைன் மூலம் டிக்கெட் வாங்க வேண்டும், டிக்கெட் கவுண்டர் திறந்திருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மகாலை பார்வையிட ஒரு நாளைக்கு 5000 பேர் அனுமிக்கப்படுவார்கள். மதியம் 2 மணிக்கு முன்பு 2500 பேரும், அதற்குப்பின் 2500 பேரும் அனுமதிக்கப்படுவார்கள்.எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story