நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தர்ணா


நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தர்ணா
x
தினத்தந்தி 21 Sep 2020 7:47 AM GMT (Updated: 2020-09-21T13:17:20+05:30)

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சட்ட புத்தகம் கிழிப்பு, அவையை நடத்திய துணைத்தலைவர் மீது பாய்ந்தது என பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறின.  நேற்று மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் ஒருவாரம் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.  

இதைத்தொடர்ந்து  உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளியேற மறுத்து தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை மூன்று முறை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கூடிய போதும் அமளி தொடர்ந்ததால், நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து,  சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் உள்பட எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story