பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது ஜனநாயக இந்தியாவை முடக்குவது ஆகும் - ராகுல்காந்தி + "||" + Muting of democratic India Rahul Gandhi slams Centre over suspension of unruly MPs
பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது ஜனநாயக இந்தியாவை முடக்குவது ஆகும் - ராகுல்காந்தி
பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது 'ஜனநாயக இந்தியாவை முடக்குவது' ஆகும் என்று கூறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக தாக்கினார்.
புதுடெல்லி:
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சட்ட புத்தகம் கிழிப்பு, அவையை நடத்திய துணைத்தலைவர் மீது பாய்ந்தது என பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறின.
இந்த நிகழ்வுகளை தொடர்ந்து அவை துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக 12 எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அவைத்தலைவரிடம் நோட்டீஸ் அளித்து உள்ளனர். ஆனால், இந்த தீர்மானத்தை ஏற்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், நேற்று மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட "டெரெக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜு சதாவ், கே.கே. ராகேஷ், ரிபுன் போரா, டோலா சென், செய்யத் நஜீர் உசேன் மற்றும் எளமாறன் கரீம் ஆகியோர் ஒரு வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டனர்" என்று நாயுடு திங்களன்று பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரு வாரம் இடைநீக்கம் செய்தபோது கூறினார்.
8 எம்.பிக்கள் ஒருவாரம் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது 'ஜனநாயக இந்தியாவை முடக்குவது' என்று கூறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக தாக்கினார்.
ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
ஆரம்பத்தில் மவுனம் சாதிப்பதன் ஊலமும் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதன் மூலமும், விவசாய கறுப்பு சட்டங்கள் குறித்த விவசாயிகளின் கவலைகளை கண்மூடித்தனமாக திசை திருப்புவதன் மூலமும். "ஜனநாயக இந்தியாவை முடக்குவது என்பது தொடருகிறது என கூறி உள்ளார்.
இந்த ‘எல்லாம் அறிந்த’ மத்திய அரசின் 'முடிவற்ற ஆணவம் 'முழு நாட்டிற்கும் பொருளாதார பேரழிவை' ஏற்டுத்தி உள்ளது என கூறி உள்ளார்.
’Muting Of Democratic India’ continues: by initially silencing and later, suspending MPs in the Parliament & turning a blind eye to farmers’ concerns on the black agriculture laws.
This ‘omniscient’ Govt’s endless arrogance has brought economic disaster for the entire country.