இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 80 சதவீதமாக ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 80 சதவீதமாக ஆக அதிகரித்துள்ளது
புதுடெல்லி
உலக அளவில் கொரோனாவிலிருந்து அதிகம் குணமடைந்தோர் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 80 சதவீதமாக ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து 43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமாகி இருப்பதாகவும், உலகில் கொரோனாவிலிருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்கையில் 19 சதவீதம் பேர் இந்தியர்கள் என்றும் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவுக்கு அடுத்து அதிகபட்சமாக அமெரிக்காவில் 18.70 சதவீதம் பேரும், பிரேசிலில் 16.90 சதவீதம் பேரும் குணமடைந்துள்ளதாக ஆய்வாளர்களால் நடத்தப்படும் வேர்ல்டோமீட்டர்ஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
Related Tags :
Next Story