தேசிய செய்திகள்

தமிழகத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு; மத்திய ரெயில்வே மந்திரி அறிவிப்பு + "||" + Suspension of construction of new railway line in Tamil Nadu; Announcement by the Union Railway Minister

தமிழகத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு; மத்திய ரெயில்வே மந்திரி அறிவிப்பு

தமிழகத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு; மத்திய ரெயில்வே மந்திரி அறிவிப்பு
தமிழகத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் மக்களவையில் அறிவித்து உள்ளார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் மதுரை எம்.பி. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், 
பொது முடக்க காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரெயில்களில் கட்டண வசூல் இல்லை.  மாநில அரசுகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் இருந்து மட்டுமே கட்டணம் பெறப்பட்டது என தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.  இந்த நிதியாண்டு முடியும் வரை ரெயில்வேயில் புதிய பணிகள் தொடங்கப்பட மாட்டாது.  புதிய பாதை அமைக்கும் பணிகள், மாற்று பாதை பணிகள், இருவழித்தட திட்டங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.

எனினும், பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள், அவசர பணிகள் எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டிசம்பர் மாதம் முடியும் வரை கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பு இல்லை முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
2. மத்திய பிரதேசத்தில் 2 ஆயிரம் புதிய கோசாலைகள் அமைக்கப்படும்; முதல் மந்திரி அறிவிப்பு
மத்திய பிரதேசத்தில் 2 ஆயிரம் புதிய கோசாலைகள் அமைக்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
3. டெல்லியில் ஐ.சி.யூ. படுக்கைகளை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் பணி; முதல் மந்திரி அறிவிப்பு
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கான ஐ.சி.யூ. படுக்கைகளை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகின்றன என முதல் மந்திரி அறிவித்துள்ளார்.
4. பாகிஸ்தானில் பேரணிகள், கூட்டங்கள் நடத்த தடை; பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு
பாகிஸ்தானில் பேரணிகள், கூட்டங்கள் நடத்த பிரதமர் இம்ரான் கான் தடை விதித்துள்ளார்.
5. திருப்போரூர் முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா ரத்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருப்போரூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் எதிரொலியாக சூரசம்ஹார விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.