தேசிய செய்திகள்

லடாக்கில் 6 புதிய சிகரங்களை கைப்பற்றிய இந்திய ராணுவ வீரர்கள் + "||" + India-China border row: Indian Army gains strategic advantage in Ladakh, takes control of six major peaks

லடாக்கில் 6 புதிய சிகரங்களை கைப்பற்றிய இந்திய ராணுவ வீரர்கள்

லடாக்கில் 6 புதிய சிகரங்களை கைப்பற்றிய இந்திய ராணுவ வீரர்கள்
லடாக்கின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள 6 புதிய சிகரங்களை இந்திய ராணுவ வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
புதுடெல்லி 

இந்தியா-சீனா எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் மீண்டும் தங்கள் 

நிலையை வலுப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த முறை, இந்திய ராணுவ வீரர்கள் 6 புதிய சிகரங்களை 

கைப்பற்றியுள்ளனர். இது சீன இராணுவத்திற்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த சிகரங்கள் லடாக்கின் கிழக்கு 

பிராந்தியத்தில் அமைந்துள்ளன. 

இந்தியா, புதிதாக 6 புதிய சிகரங்களை கைப்பற்றிய நிலையில், இந்திய சீன பகுதியில் இப்போது இந்திய 

ராணுவத்தின் கை ஓங்கியுள்ளது. சீன இராணுவத்தின் அசைவுகளை இந்தியா துல்லியமாக கண்காணித்து 

வருகிறது.

இந்திய இராணுவ வீரர்கள் இந்த சிகரங்களை ஆக்கிரமித்ததிலிருந்து, சீன வீரர்கள் இந்திய வீரர்களின் 

நடமாட்டத்தை கண்காணிக்க எல்லையை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வதும் 

கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ரபேல், மிராஜ் மற்றும் சுகோய் போர் விமானங்கள் 

முன்னெச்சரிக்கையாக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்திய விமானப்படை 24 மணி நேர எச்சரிக்கை நிலையில் பணியாற்றி வருகிறது. ஏனெனில் இந்த முறை இந்திய 

ராணுவம் எதிரிக்கு எந்த வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்க விரும்பவில்லை. ஆகஸ்ட் 29-30 இரவு, சீனத் 

துருப்புக்கள் பாங்காங் ஏரியின் தெற்குப் பகுதியில் உள்ள ப்ளாக் டாப் மலைகளைக் கைப்பற்ற முயற்சித்தார்கள். 

ஆனால் சீன வீரர்களின் நரி தந்திரத்தை இராணுவ வீரர்கள் முறியடித்தனர். 

கல்வான் பகுதியில் ஜூன் மாதம் சீனா நடத்திய தாக்குதலை அடுத்து, அடுத்த அடுத்த நிகழ்வுகளில் சீனாவின் 

தந்திர நடவடிக்கைகளை முறியடித்து தொடர்ந்து இந்தியா வலுவான நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா - சீனா இடையேயான 8-வது கட்ட ராணுவ பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெற வாய்ப்பு
எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கும் இடையே ராணுவரீதியிலும், அதிகாரிகள் மட்டத்திலும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.
2. ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்
இந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தான் ராணுவத்தின் குவாட்காப்டர் எனப்படும் டிரோனை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
3. ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றிக்கு இந்தியா இதயபூர்வமாக பணியாற்றி உள்ளது- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றிக்கு இந்தியா இதயபூர்வமாக பணியாற்றி உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
4. கொரோனா பாதிப்பு: கடந்த 8 மாதங்களில் அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்...!
கொரோனா பாதிப்பு காலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக அக்டோபரில் ரூ .1 லட்சம் கோடியை தாண்டக்கூடும் என தகவ்ல் வெளியாகி உள்ளது.
5. 5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை தயாரிக்க நாங்கள் தயார்- ஆதார் பூனவல்லா
5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை எங்கள் நிறுவனம் தயாரிக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகிறார்