கொரோனா, பொருளாதார மீட்பில் இந்தியா-மாலத்தீவுகள் இணைந்து செயல்படும்-பிரதமர் மோடி சொல்கிறார்


கொரோனா, பொருளாதார மீட்பில் இந்தியா-மாலத்தீவுகள் இணைந்து செயல்படும்-பிரதமர் மோடி சொல்கிறார்
x
தினத்தந்தி 22 Sept 2020 6:30 AM IST (Updated: 22 Sept 2020 6:30 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா, பொருளாதார மீட்பில் இந்தியா-மாலத்தீவுகள் இணைந்து செயல்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

மாலத்தீவுகள் அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து டுவிட்டர் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் “மாலத்தீவுக்கு உதவிக்கரம் தேவைப்படும்போதெல்லாம் இந்தியா உதவி வந்துள்ளது. பிரதமர் மோடிக்கு நன்றி” என்று கூறியிருந்தார். இந்தியா வழங்கிய 25 கோடி டாலர் நிதி உதவிக்கு நன்றி தெரிவித்து இந்த பதிவை அவர் வெளியிட்டு இருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக மோடி வெளியிட்ட டுவிட் செய்தியில், “இந்தியாவும், மாலத்தீவும் அண்டை நாடுகள் மட்டுமல்ல, நெருங்கிய நட்பு நாடுகள். இருநாடுகளும் கொரோனாவுக்கு எதிரான ஆரோக்கிய, சுகாதார நடவடிக்கைகளிலும், பொருளாதார தாக்கத்திலும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக இணைந்து செயல்படுவோம்” என்று கூறி உள்ளார்.


Next Story