மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் ஒரு நாள் உண்ணா விரத போராட்டம் அறிவிப்பு
மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போது, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையில் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து மாநிலங்களை தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்தார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாக்தில் நேற்று மாலை முதல் 8 எம்.பிக்களும் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளாக இன்றும் தர்ணா நீடித்து வருகிறது. இந்த நிலையில், உறுப்பினர்கள் தன்னை அவமதித்ததைக் கண்டித்து ஒருநாள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட போவதாக மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Related Tags :
Next Story