ராஜஸ்தானில் முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி
ராஜஸ்தானில் முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலியானார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் சாகியா இனாம். இவர் 3 முறை எம்.எல்.ஏ. ஆகவும், 2 முறை மாநில மந்திரி சபையில் மந்திரியாகவும் இடம் பெற்றுள்ளார். ராஜஸ்தானில் 3முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் மந்திரியான இவர் சில நாட்களுக்கு முன்பு, மூச்சுத்திணறல் பாதிப்பால் ராஜஸ்தான் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று மாலை மரணம் அடைந்தார். இவருக்கு ஒரு மகள் உள்ளார்.
Related Tags :
Next Story