மும்பையில் கனமழை; சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு


மும்பையில் கனமழை; சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 23 Sep 2020 2:04 AM GMT (Updated: 23 Sep 2020 2:04 AM GMT)

மும்பையில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

இந்தியாவில் இன்னும் சில நாட்களில் பருவமழைக் காலம் தொடங்க உள்ள நிலையில், ஒரு சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் மும்பையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக மும்பையின் கோரேகான், கிங்ஸ் சர்கில் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்கிரி, ஜொஜேஷ்வரி, கோரிஹன், மலட், போரிவாலி உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை புரட்டி எடுத்தது. இதனால் நகரின் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், குறைந்த காற்றழுத்தம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மராட்டிய மாநிலத்தில் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story