தேசிய செய்திகள்

தி.மு.க. எம்.பி.யை அச்சுறுத்திய விவகாரம்: 2-வது நாளாக டெல்லி போலீஸ் விசாரணை + "||" + DMK MP threatened: Delhi police probe into 2nd day

தி.மு.க. எம்.பி.யை அச்சுறுத்திய விவகாரம்: 2-வது நாளாக டெல்லி போலீஸ் விசாரணை

தி.மு.க. எம்.பி.யை அச்சுறுத்திய விவகாரம்: 2-வது நாளாக டெல்லி போலீஸ் விசாரணை
தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்தை அச்சுறுத்திய விவகாரம் தொடர்பாக, இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் இரு அவைகளிலும் பல முக்கிய மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
 
கூட்டத்தொடரின் 9-வது நாளான நேற்று மக்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த், புலனாய்வு பிரிவினர் என்று கூறிக்கொண்டு பிற்பகல் 1.40 மணி அளவில் 2 பேர் தன்னை தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்ததாகவும், அவர்கள், மக்களவையில் பேசுவது குறித்து மிரட்டும் தொனியில் கேள்வி எழுப்பியதாகவும் குற்றச்சாட்டு கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய மக்களவை தலைவர், உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் எழுத்துப்பூர்வமாக என்னிடம் புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இரண்டாவது நாளாக இன்று டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக கதிர் ஆனந்த் எம்.பி. தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அங்கிருந்த வருகை பதிவேடு மற்றும் சிசிடிவி பதிவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.