மராட்டியம்- ஆந்திராவில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு


மராட்டியம்- ஆந்திராவில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 23 Sept 2020 8:25 PM IST (Updated: 23 Sept 2020 8:25 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியம்- ஆந்திரா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மும்பை

மராட்டிய மாநிலத்தில் கொரோனாவால் இன்று 479 பேர் உயிரிழப்பு; 21,029 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,63,799 ஆக உயர்ந்து உள்ளது. பலி எண்ணிக்கை 33,886 ஆகவும் உயர்ந்து உள்ளது. 2,73,477 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திராவில் புதிதாக 7,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது, மேலும் 45 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,46,530 ஆகவும், பலி எண்ணிக்கை 5,506 ஆகவும் உயர்ந்து உள்ளது.

Next Story