நாடாளுமன்றம் கால வரையின்றி ஒத்திவைப்பு
அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ந் தேதி தொடங்கியது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான வார விடுமுறை இன்றி சபைகள் இயங்கின. வரும் அக்டோபர் 1 ஆம் தேதி கூட்டத்தொடர் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், கூட்டத்தொடரில் பங்கேற்ற 25-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாராளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

Related Tags :
Next Story