மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி மறைவு: வாழ்நாள் முழுவதும், மக்களின் நலனுக்காகவே உழைத்தார் - ஜே.பி.நட்டா புகழாரம்
மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி மறைவுக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பாஜக மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித் ஷா, பாஜக முதல்வர்கள் எடியூரப்பா, சிவராஜ் சிங் சவுகான் உட்பட பல்வேறு தலைவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்தநிலையில் கர்நாடக மாநிலம் பெலகாவி தொகுதி எம்.பியான சுரேஷ் அங்காடி, கடந்த செப்டம்பர் 11-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஒரு வாரமாக உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுரேஷ் அங்காடிக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முதல் மத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி ஆவார். சுரேஷ் அங்காடி மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
எங்கள் மூத்த தலைவர்களில் ஒருவரான சுரேஷ் அங்காடி ஜி இன்று காலமானார் என்பது துரதிர்ஷ்டவசமானது. தனது வாழ்நாள் முழுவதும், மக்களின் நலனுக்காகவே உழைத்தார். அவரது மறைவால் வாடும் அவருடைய குடும்பத்திற்கு எல்லாம் வல்ல இறைவன் பலம் அளிக்கும்படி பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story