மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி மறைவு: முதல்-மந்திரி எடியூரப்பா இரங்கல்
மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி மறைவுக்கு கர்நாடக மாநில முதல்-மந்திரி எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பாஜக மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித் ஷா, பாஜக முதல்வர்கள் எடியூரப்பா, சிவராஜ் சிங் சவுகான் உட்பட பல்வேறு தலைவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்தநிலையில் கர்நாடக மாநிலம் பெலகாவி தொகுதி எம்.பியான சுரேஷ் அங்காடி, கடந்த செப்டம்பர் 11-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு வாரமாக உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். சுரேஷ் அங்காடிக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முதல் மத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி ஆவார். சுரேஷ் அங்காடி மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
சுரேஷ் அங்கடி ஒரு பிரபலமான தலைவராக இருந்தார், அவர் பெலகாவி மக்களவைத் தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பல ரயில் திட்டங்களை கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு வருவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story