தேசிய செய்திகள்

தினமும் அடி, உதை; கணவரை கொன்று உடலை 28 மணிநேரம் படுக்கையின் கீழே மறைத்து வைத்த மனைவி + "||" + Daily feet, kicks; The wife who killed her husband and hid in the bedroom for 28 hours

தினமும் அடி, உதை; கணவரை கொன்று உடலை 28 மணிநேரம் படுக்கையின் கீழே மறைத்து வைத்த மனைவி

தினமும் அடி, உதை; கணவரை கொன்று உடலை 28 மணிநேரம் படுக்கையின் கீழே மறைத்து வைத்த மனைவி
தினமும் அடித்து, உதைத்து துன்புறுத்திய கணவரை கொன்று உடலை படுக்கையின் கீழே 28 மணிநேரம் மறைத்து வைத்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் ஹமீர்வாஸ் நகரில் சங்கத்தல் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் நிர்மல் சிங்.  இவரது மனைவி நீரஜ்.  இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நிர்மல் சிங் தினமும் இரவில் தனது மனைவியை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார்.  ஒவ்வொரு நாளும் இரண்டு பேருக்கும் இடையே சண்டை நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிறு இரவு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.  இதில், ஆத்திரமுற்ற நீரஜ், கயிறு ஒன்றால் கணவரின் கழுத்தில் இறுக்கியதில் நிர்மல் உயிரிழந்து விட்டார்.  இதனால் பயந்துபோன அவரது மனைவி, நிர்மலின் உடலை படுக்கையின் கீழே மறைத்து வைத்து விட்டார்.

இதன்பின்பு நிர்மலை தேடி அவரது வீட்டுக்கு அண்ணன் அசோக் சிங் ஜாட் வந்துள்ளார்.  28 மணிநேரத்திற்கு மேலாக மறைத்து வைக்கப்பட்டு இருந்த உடலில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.  இதன்பின்னரே நிர்மல் கொல்லப்பட்ட விவரம் தெரிய வந்துள்ளது.  இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.  அவர்கள் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நிர்மலின் பிரேத பரிசோதனை நடந்து முடிந்து அவரது குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.  கொல்லப்பட்ட நிர்மலின் மனைவி நீரஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.  அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. குற்றாலத்தில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.45 லட்சம் கொள்ளை 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை
குற்றாலத்தில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.45 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. நெல்லை, தூத்துக்குடியில் இலங்கை ரவுடிகள் பதுங்கலா? அகதிகள் முகாமில் உளவுப்பிரிவு போலீசார் அதிரடி விசாரணை
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாமில் இலங்கை ரவுடிகள் பதுங்கி இருக்கிறார்களா? என்று உளவுப்பிரிவு போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.
3. தலை, மூக்கு பகுதியில் காயங்கள் இருந்ததால் தகனம் செய்ய முயன்ற மூதாட்டி உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை
தலை, மூக்கு பகுதியில் காயங்களுடன் சுடுகாட்டில் தகனம் செய்ய முயன்ற மூதாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார், மகன், பேரன்கள் மற்றும் சான்றிதழ் வழங்கிய டாக்டர் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.
4. புரட்டாசி விரதம் முடிவடைந்தது: மார்க்கெட், இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்
புரட்டாசி விரதம் முடிவடைந்த நிலையில் நேற்று மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
5. நெல்லை அருகே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
நெல்லை அருகே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.