பீகார் சட்டசபை தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு


பீகார் சட்டசபை தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு
x
தினத்தந்தி 25 Sep 2020 3:43 AM GMT (Updated: 25 Sep 2020 3:43 AM GMT)

பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர்களுடன் இன்று சந்திப்பு நடத்துகிறது.

புதுடெல்லி,

பீகாரில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.  இக்கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து உள்ளது.  இந்நிலையில், 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு வருகிற அக்டோபரில் ஒரு சில கட்டங்களில் தேர்தல் நடத்தப்பட கூடும் என கூறப்படுகிறது.

பீகாரில் பொதுமக்களிடையே கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தேர்தலை பாதுகாப்புடன் நடத்துவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய தேவையாக உள்ளது.

இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் டெல்லியில் இன்று மதியம் 12.30 மணியளவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்த இருக்கிறது என ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பு அதிகாரி ஷெபாலி சரண் தெரிவித்து உள்ளார்.  இதில் பீகார் சட்டசபை தேர்தல் பற்றி அறிவிப்பு வெளியாக கூடும் என கூறப்படுகிறது.

Next Story