இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 86,052 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி


இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 86,052 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
x
தினத்தந்தி 25 Sept 2020 9:57 AM IST (Updated: 25 Sept 2020 9:57 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சம் என்ற அளவை கடந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  இதுபற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 86,052 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58 லட்சத்து 18 ஆயிரத்து 571 ஆக உயர்வடைந்து உள்ளது.

இதேபோன்று இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,141 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 91 ஆயிரத்து 149ல் இருந்து 92 ஆயிரத்து 290 ஆக அதிகரித்து உள்ளது.

இதுவரை சிகிச்சை முடிந்து குணமடைந்து சென்றவர்களின் எண்ணிக்கை 47 லட்சத்து 56 ஆயிரத்து 165 ஆக உள்ளது.  மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 70 ஆயிரத்து 116 ஆக உள்ளது என தெரிவித்து உள்ளது.

Next Story