தேசிய செய்திகள்

ரூ.20,000 கோடி வரி தொடர்பான வழக்கு: இந்திய அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வோடஃபோன் வெற்றி + "||" + Vodafone wins arbitration case against India over retrospective tax demand of Rs 20,000 crore

ரூ.20,000 கோடி வரி தொடர்பான வழக்கு: இந்திய அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வோடஃபோன் வெற்றி

ரூ.20,000 கோடி வரி தொடர்பான வழக்கு: இந்திய அரசுக்கு எதிராக  சர்வதேச நீதிமன்றத்தில் வோடஃபோன் வெற்றி
சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசுக்கு எதிராக ரூ.20,000 கோடி வரி தொடர்பான வழக்கில் வோடஃபோன் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி

சிங்கப்பூரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக ரூ.12,000 கோடி நிலுவைத் தொகையும், ரூ.7,900 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்பு நிறுவனமான வோடஃபோன் தெரிவித்தது.

இது தொடர்பாக வோடஃபோன் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்தை 2016 ஆம் ஆண்டில் அணுகியது. வோடஃபோன் மீது இந்திய அரசு வரிச்சலுகை விதிப்பது இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான முதலீட்டு ஒப்பந்தத்தை மீறுவதாக தீர்ப்பாயம் தீர்ப்பளித்ததாக நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசாங்கத்தின் நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்கு சுப்ரீம் கோர்ட்  மொபைல் நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகள் அவகாசம் அளித்ததால், கடன்பட்டுள்ள தொலைத் தொடர்பு நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் சில நிவாரணங்களை பெற்றது. ஆனால் நிறுவனத்தின் நீண்டகால பிரச்சினைகள் முடிவடையவில்லை.

இந்தியாவின் தொலைத் தொடர்பு துறை தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் ஏறக்குறைய 3-5 சதவீதத்தை ஏர்வேவ்ஸிற்கான பயன்பாட்டுக் கட்டணமாகவும், ஏஜிஆரில் 8 சதவீதத்தை உரிமக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும். ஆனால் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஏ.ஜி.ஆரின் வரையறையை நீண்டகாலமாக மறுத்துள்ளனர். கடந்த ஆண்டு ஏ.ஜி.ஆர் அனைத்து வருவாயையும் சேர்க்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கருத்தை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.

தொடர்புடைய செய்திகள்

1. வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவு- விரைந்து அமல்படுத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
முடிவை அமல்படுத்த ஒரு மாதம் அவகாசம் கோருவது நியாயமில்லை எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது.
2. பேச்சு சுதந்திரம் சமீபத்திய காலங்களில் மிகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சுதந்திரங்களில் ஒன்றாகும் -சுப்ரீம் கோர்ட்
தப்லீக் ஜமாத் பற்றி போலி செய்திகளை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் பேச்சு சுதந்திரம் சமீபத்திய காலங்களில் மிகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சுதந்திரங்களில் ஒன்றாகும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
3. வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை எரிக்கப்பட்டது-உ.பி. அரசு
வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை எரிக்கப்பட்டது என உத்தர பிரதேச அரசு நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
4. வங்கி மாதத் தவணை விவகாரத்தில் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டியில்லை-சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
வங்கி மாதத் தவணை விவகாரத்தில் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டியில்லை என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளது.
5. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை:சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தள்ளுபடி செய்ய அமெரிக்க கோரிக்கை
பொருளாதாரத் தடைகளை நீக்கக் கோரி ஈரான் கொண்டு வந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்காவின் வழக்கறிஞர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளை கேட்டுக்கொண்டனர்.