டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை
டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, கடந்த 14ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இருப்பினும், நேற்று முன்தினம் அவருக்கு காய்ச்சல் மற்றும் சுவாசத்தில் சிரமம் ஏற்பட்டதால் லோக்நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து மேக்ஸ் மருத்துவமனைக்கு நேற்று மாற்றப்பட்டார். கொரோனா வைரஸ் தொற்று உள்ள நிலையில், அடுத்தகட்ட சோதனை செய்து பார்த்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சலும் இருப்பது உறுதியாகி உள்ளது. மருத்துவர்கள் மனிஷ் சிசோடியாவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், மனிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

Related Tags :
Next Story