71-வது நிறுவன நாள்; சீனாவுக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து


71-வது நிறுவன நாள்; சீனாவுக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து
x
தினத்தந்தி 2 Oct 2020 3:45 AM IST (Updated: 2 Oct 2020 3:10 AM IST)
t-max-icont-min-icon

சீனா, இந்தியா இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தநிலையில், சீனா நிறுவப்பட்டதன் 71-வது நிறுவன நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சீனாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 71-ம் ஆண்டு நிறுவன நாளையொட்டி சீன வெளியுறவு மந்திரி யங் இ, சீன அரசு மற்றும் அந்நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.

Next Story