இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.
புதுடெல்லி,
சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உரிய பலன் கிடைத்ததாக தெரியவில்லை. கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளும் இன்னும் பொது பயன்பாட்டுக்கு வராததால், தொற்றின் வேகம் தணிந்தபாடில்லை.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய பிடிஐ செய்தி நிறுவனத்தின் பட்டியலில் நேற்று இரவு நிலவரப்படி இந்தியாவில் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 768 ஆக இருந்தது. மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வெளியிடும் தொற்று பாதிப்பு பற்றிய தகவலைக் கொண்டு இந்தப்பட்டியல் அப்டேட் செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story