ஹத்ராஸ் துஷ்பிரயோகம், மரணமடைந்த சிறுமியின் வீடியோவை பாஜக வெளியிட்டது; காங்கிரஸ் கண்டனம்


ஹத்ராஸ் துஷ்பிரயோகம், மரணமடைந்த சிறுமியின் வீடியோவை பாஜக வெளியிட்டது; காங்கிரஸ் கண்டனம்
x
தினத்தந்தி 3 Oct 2020 12:56 PM IST (Updated: 3 Oct 2020 1:02 PM IST)
t-max-icont-min-icon

ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி மரணமடைந்த சிறுமியின் வீடியோவை பாஜக-வின் தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அமித் மாளவியா டுவிட்டரில் வெளியிட்டார்.

லக்னோ: 

ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி மரணமடைந்த சிறுமியின் வீடியோவை பாஜக-வின் தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அமித் மால்வியா ட்விட்டரில் பகிர்ந்தது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான ஒரு தலித் இளம்பெண், சமீபத்தில் உயர்சாதி வாலிபர்கள் 4 பேரால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலையும் போலீசார் அவசர அவசரமாக தகனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது.

இந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரிய போராட்டங்கள் வெடித்தன. தேசிய தலைநகரில் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். 

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேரா ஆகியோரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

ஹத்ராஸ் சம்பவம் குறித்து எஸ்ஐடி சமர்ப்பித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கையாண்டது தொடர்பாக ஹத்ராஸ் எஸ்.பி. விக்ராந்த் வீர் மற்றும் நான்கு போலீஸ் அதிகாரிகளை உத்தரபிரதேச அரசு  இடைநீக்கம் செய்தது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி வெளியே மருத்துவமனைக்கு வெளியே தரையில் படுத்து கிடந்த படி நிருபருடன் பேசும் வீடியோவை பாஜக-வின் தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அமித் மாளவியா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஹாத்ராஸ் பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு நிருபரிடம் பேசினார், சிறுமி அவரது கழுத்தை நெரித்ததாக கூறினார்.குற்றத்தின் கொடூரத்திலிருந்து விலக்க எதுவுமில்லை, ஆனால் அதற்கு வேறு சாயம் பூசுவது மற்றும் கொடூரமான குற்றத்தை மற்றொருவருக்கு எதிராக திசை திருப்புவது நியாயமற்றது என்று மாளவியா வீடியோவுடன் ட்விட் செய்துள்ளார்.

அமித் மாளவியாவின் செயலை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது, வீடியோவைப் பகிர்ந்ததற்காக மாளவியாவை பகிரங்கமாக சாடியுள்ளது.

மலிவான, வெட்கமில்லாத மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்ட நபர் மட்டுமே பாஜக-வின் தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவராக இருக்க முடியும், அமித் மாளவியா அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராதிகா கெரா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.பாஜக தொழில்நுட்பக் குழுவை சிறையில் அடைக்க ஊடகங்கள் ஒரு பிரச்சாரத்தை நடத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.



Next Story