ஹத்ராஸ் செல்ல ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் 5 பேர் மட்டுமே செல்ல போலீஸ் அனுமதி
ஹத்ராஸ் செல்ல ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் 5 பேர் மட்டுமே செல்ல போலீஸ் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண் குடும்பத்துக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி தலைமையில் எம்பிக்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சி குழுவினர் ஹத்ராஸ்க்கு புறப்பட்டனர். ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி காரிலும் ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர் பேருந்திலும் சென்றனர்.
ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸாரை தடுத்து நிறுத்த நொய்டாவில் சாலை மூடப்பட்டது. ராகுல்காந்தி வருகையையொட்டி போலீசார் குவிக்கப்பட்டனர். ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திப்பதை, உலகில் எதுவும் தடுக்க முடியாது என ராகுல்காந்தி கூறியிருந்தார்.
இந்நிலையில் ஹத்ராஸ் செல்ல ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் 5 பேர் மட்டுமே செல்ல போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
Related Tags :
Next Story