சர்வதேச நிதியுதவி மூலம் எதிர்க்கட்சிகள் சாதி - வகுப்புவாத கலவரங்களைத் தூண்டுகின்றன் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்


சர்வதேச நிதியுதவி மூலம் எதிர்க்கட்சிகள் சாதி - வகுப்புவாத கலவரங்களைத் தூண்டுகின்றன் உ.பி முதல்வர்  யோகி ஆதித்யநாத்
x
தினத்தந்தி 5 Oct 2020 4:44 PM IST (Updated: 5 Oct 2020 4:44 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் சர்வதேச நிதியுதவி மூலம் எதிர்க்கட்சிகள் சாதி மற்றும் வகுப்புவாத கலவரங்களைத் தூண்டுவதாக மாநில முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார்.

லக்னோ

உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-

சர்வதேச நிதியுதவி மூலம் சாதி மற்றும் வகுப்புவாத கலவரங்களுக்கு ஒரு அடித்தளத்தை அமைக்க முயற்சிப்பதன் மூலம் எங்கள் எதிரிகள் எங்களுக்கு எதிராக சதி செய்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சிகள் மாநிலத்தில்கலவரங்களைக் காண ஆர்வமாக இருந்தன. இந்த சதிகளுக்கிடையில் நாங்கள் முன்னேற வேண்டும்.

சமூக விரோத மற்றும் தேச விரோத சக்திகள் மாநிலத்தின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்வது கடினம் என்றும், பாரதீய ஜனதா தொண்டர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Next Story