இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கடலோர பாதுகாப்பு படை ரோந்து கப்பல் வெள்ளோட்டம்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கடலோர பாதுகாப்பு படை ரோந்து கப்பல் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.
சென்னை,
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் இந்திய பாதுகாப்பு படைக்கு 7-வது ரோந்து கப்பலை தனியார் நிறுவனம் தயாரித்தது. இந்த கப்பலை வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நேற்று சென்னை எண்ணூர் அருகே உள்ள காட்டுப்பள்ளி பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் செலவுத்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் தலைமை தாங்கினார். இந்திய கடலோர பாதுகாப்பு படையின் டி.ஜி.கே.நடராஜன், ஐ.ஜி. எஸ்.பரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
26 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய இந்த அதிநவீன ரோந்து கப்பலின் வெள்ளோட்டத்தை செலவுத்துறை செயலாளரின் மனைவி ஹேமா சோமநாதன் தொடங்கி வைத்தார். அடுத்த ஆண்டு (2021) மார்ச் மாதம் இந்த ரோந்து கப்பல் கடலோர பாதுகாப்பு படையில் இணைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story