கொரோனா எதிரொலி; கேரள ஸ்ரீபத்மநாபசாமி கோவில் வரும் 15ந்தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு + "||" + Corona echo; Kerala Sreepadmanabhasami temple to be closed till 15th
கொரோனா எதிரொலி; கேரள ஸ்ரீபத்மநாபசாமி கோவில் வரும் 15ந்தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு
கொரோனா எதிரொலியாக கேரளாவில் உள்ள ஸ்ரீபத்மநாபசாமி கோவில் வரும் 15ந்தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்மநாபசாமி கோவில் அமைந்துள்ளது. கொரோனா பாதிப்புகளால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சிறிய மற்றும் பெரிய என அனைத்து கோவில்களும் மூடப்பட்டன.
இதன்பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, கோவில்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதேபோன்று கேரளாவில் உள்ள ஸ்ரீபத்மநாபசாமி கோவிலும் திறக்கப்பட்டது. எனினும், சமூக இடைவெளி, குறைந்த அளவிலான பக்தர்கள் என கட்டுக்கோப்புடன் சில விதிகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், அந்த கோவிலில் உள்ள 2 பூசாரிகள் உள்பட கோவில் பணியாளர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகம் கோவிலை மூடுவது என முடிவு செய்துள்ளது.
எனவே, கேரளாவில் உள்ள ஸ்ரீபத்மநாபசாமி கோவில் வரும் 15ந்தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.