தேசிய செய்திகள்

இந்திய போர் விமானங்களை பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஊழியர் கைது + "||" + HAL employee arrested for spying for Pakistan; was supplying information to ISI about Indian fighter jets

இந்திய போர் விமானங்களை பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஊழியர் கைது

இந்திய போர் விமானங்களை பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஊழியர் கைது
இந்திய போர் விமானங்கள் பற்றி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஊழியர் நாசிக் பயங்கரவாத தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை: 

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) ஊழியர் நாசிக் பயங்கரவாத தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் உளவு நிறுவனமான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸுக்கு ரகசிய தகவல்களை வழங்கியதற்காக இவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஊழியர் இந்திய போர் விமானங்கள் மற்றும் அவற்றின் உற்பத்தி பிரிவு பற்றிய தகவல்களை அளித்து வருவதாக குற்றம்சாட்டி உள்ளது.

கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், விசாரணையின் போது, அவர் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்ததாகவும், அதன் முகவர்களுக்கு இரகசிய தகவல்களை வழங்குவதாகவும் தெரிய வந்துள்ளது.

ஹால் மற்றும் நாசிக் நகரில் உள்ள ஓசாரில் உள்ள அதன் விமான உற்பத்தி பிரிவு பற்றிய முக்கியமான விவரங்கள் தொடர்பான தகவல்கள். விமானநிலையம் மற்றும் உற்பத்தி பிரிவுக்குள் தடைசெய்யப்பட்ட பகுதிகள் பற்றிய தகவல்களையும் பாகிஸ்தான் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளார்.

அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம், 1923 இன் 3, 4 மற்றும் 5 பிரிவுகளின் கீழ் பயங்கரவாத தடுப்புப் படை வழக்கு பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபரிடமிருந்து ஐந்து சிம் கார்டுகள் மற்றும் இரண்டு மெமரி கார்டுகளுடன் மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு  உள்ளது. அவைகள் தடயவியல் பரிசோதனைக்கு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்டவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 10 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் இம்ரான்கான் யோசனை
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு சென்றுள்ளார். நேற்று இலங்கை-பாகிஸ்தான் வர்த்தக முதலீட்டு மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
2. பாகிஸ்தான்: ராணுவத் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
பாகிஸ்தானின் மிர் அலி நகரில் நேற்று நடந்த ராணுவத் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் பலியானதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
3. பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது
பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
4. பொருளாதாரசரிவு:பாகிஸ்தான் மிகப்பெரிய பூங்காவை ரூ. 50 ஆயிரம் கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான்கான்
பாகிஸ்தான் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க, அந்நாட்டின் மிகப்பெரிய பூங்காவை 50 ஆயிரம் கோடி பாகிஸ்தான் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
5. பாகிஸ்தான், சீனா இணைந்து சக்திவாய்ந்த அச்சுறுத்தலை உருவாக்குகின்றன -ராணுவ தலைமை தளபதி
பாகிஸ்தான், சீனா இணைந்து சக்திவாய்ந்த அச்சுறுத்தலை உருவாக்குகின்றன என ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே கூறினார்.