மராட்டியத்தில் அரசுப் பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு- உத்தவ் தாக்கரே அறிவிப்பு


மராட்டியத்தில் அரசுப் பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு- உத்தவ் தாக்கரே அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Oct 2020 8:28 PM IST (Updated: 9 Oct 2020 8:31 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் அரசுப்பணியாளர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய  மாநிலத்தில் நடைபெற இருந்த அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

மராட்டியத்தில் வரும் 11 ஆம் தேதி  அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வந்தன. 

இந்நிலையில், தேர்வு  ஒத்திவைக்கப்படுவதாக  மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று அறிவித்தார். "பல்வேறு மாணவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது” எனக்கூறியுள்ளார். மேலும், 
தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறினார். 


Next Story