கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,755-பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,755- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,755-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று ஒரே கொரோனா தொற்று பாதிப்புடன் கேரளாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 918- ஆக உள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரேநாளில் கொரோனா தொற்றுக்கு 23 பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 978 ஆக உள்ளது.
அதேபோல், கேரளாவில் இன்று ஒரே நாளில் சுமார் 7 ஆயிரம் பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 82 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். திருவனந்தபுரம், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் மேலாக பதிவாகியுள்ளது.
Related Tags :
Next Story