வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு; மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
வேளாண் குடிமக்கள் விவசாய விளைபொருட்களை நேரடியாக சந்தையில் விற்பனை செய்து பயன்பெறும் வகையிலான வேளாண் மசோதாக்களை மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டு அவற்றுக்கு சட்ட வடிவம் கொடுக்கப்பட்டது.
எனினும், இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. நாட்டின் பல்வேறு இடங்களிலும் ரெயில் மறியல் உள்ளிட்ட எதிர்ப்பு போராட்டங்களும் நடந்தன.
இதனை தொடர்ந்து தி.மு.க., ராஷ்டீரிய ஜனதா தளம், சத்தீஷ்கார் கிசான் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
Related Tags :
Next Story