சுரங்கப்பாதை திறப்பு விழாவுக்கு முன் சோனியா காந்தி நாட்டிய அடிக்கல் அகற்றப்பட்டது - காங்கிரஸ் புகார்
சுரங்கப்பாதை திறப்பு விழாவுக்கு முன் சோனியா காந்தி நாட்டிய அடிக்கல் அகற்றப்பட்டதாக, காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.
சிம்லா,
இமாசலபிரதேசத்தின் ரோஹ்டங்கில் மலைச்சிகரத்தில் 9.2 கி.மீ. நீளமான சுரங்கப்பாதையை அக்டோபர் 3-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது தொடர்பாக புகார் அளிக்கும் விதமாக, மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குருக்கு (பா.ஜ.க.), மாநில காங்கிரஸ் தலைவர் குல்தீப் சிங் தாக்குர், கடிதம் அனுப்பி உள்ளார்.
“ரோஹ்டங் சுரங்கப்பாதைக்கு 2010-ம் ஆண்டு ஜூன் 28-ந்தேதி அப்போது காங்கிரஸ் முதல்-மந்திரியாக இருந்த பிரேம் குமார் துமல் மற்றும் மத்திய அமைச்சர் வீரபத்ரசிங் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். ஆனால் சுரங்கப்பாதை திறப்புவிழாவுக்கு முன்பு சோனியா காந்தியால் கொண்டுவரப்பட்ட அந்த திட்டத்தின் அடிக்கல் திட்டமிட்டு அகற்றப்பட்டு உள்ளது. இது ஜனநாயக விரோத போக்கு மற்றும் சட்ட விரோத நடவடிக்கையாகும்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story