கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் பெங்களூருவுக்கு 3-வது இடம் - தேசிய குற்றப்பிரிவு காப்பக ஆணையம் தகவல்


கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் பெங்களூருவுக்கு 3-வது இடம் - தேசிய குற்றப்பிரிவு காப்பக ஆணையம் தகவல்
x
தினத்தந்தி 14 Oct 2020 4:25 PM IST (Updated: 14 Oct 2020 4:25 PM IST)
t-max-icont-min-icon

கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் பெங்களூரு 3-வது இடத்தை பிடித்து உள்ளதாக, தேசிய குற்றப்பிரிவு காப்பக ஆணையம் கூறியுள்ளது.

பெங்களூரு,

தேசிய குற்றப்பிரிவு காப்பக ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பெண்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. 

அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:-

கடந்த 2018-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் நகரங்களின் அடிப்படையில் டெல்லி முதல் இடமும், மும்பை 2-வது இடமும், காசியாபாத் 3-வது இடமும், கான்பூர் 4-வது இடமும் பிடித்து இருந்தது. பெங்களூரு 5-வது இடத்தில் இருந்தது.

இந்தநிலையில் கடந்த ஆண்டும் (2019) டெல்லி 431 வழக்குகளுடன் முதல் இடத்திலும், 377 வழக்குகளுடன் மும்பை 2-வது இடத்திலும், 158 வழக்குகளுடன் பெங்களூரு 3-வது இடத்திலும், 117 வழக்குகளுடன் கான்பூர் 4-வது இடத்திலும், 115 வழக்குகளுடன் நாக்பூர் 5-வது இடத்திலும், 114 வழக்குகளுடன் காசியாபாத் 6-வது இடத்திலும், 110 வழக்குகளுடன் புனே 7-வது இடத்திலும், 103 வழக்குகளுடன் அகமதாபாத் 8-வது இடத்திலும், 83 வழக்குகளுடன் கொச்சி 9-வது இடத்திலும், 82 வழக்குகளுடன் இந்தூர் 10-வது இடத்திலும் உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story