பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் கூட கொரோனா பாதிப்பை இந்தியாவை விட சிறப்பாக கையாண்டன- ராகுல்காந்தி


பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் கூட கொரோனா பாதிப்பை இந்தியாவை விட சிறப்பாக கையாண்டன- ராகுல்காந்தி
x
தினத்தந்தி 16 Oct 2020 5:13 AM GMT (Updated: 16 Oct 2020 5:13 AM GMT)

பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் கூட கொரோனா இந்தியாவை விட சிறப்பாக கையாண்டன" என்று ராகுல் காந்தி விளக்கப்படத்துடன் டுவீட் செய்துள்ளார்.

புதுடெல்லி:

இந்திய பொருளாதாரம் இந்த ஆண்டு 10.3 சதவிகிதம் பெரியளவில் சுருங்கப் போகிறது என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை குற்றம் சாட்டி உள்ளார். இது அரசாங்கத்தின் மற்றொரு "திடமான சாதனை" என்று கூறினார்.

வங்காள தேசம், மியான்மர், நேபாளம், சீனா, பூட்டான், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கான 2020-21 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நாணய நிதியத்தின் வளர்ச்சி கணிப்புகளைக் காட்டும் விளக்கப்படம் மூலம் ராகுல்காந்தி மத்திய அரசை குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த ஆண்டு இந்திய பொருளாதாரம் 10.3 சதவிகிதம் சுருங்குவதாக கணிக்கப்பட்டுள்ளது. இது  மற்றநாடுகளைவிட அதிகமாகும்.

பாஜக அரசாங்கத்தின் மற்றொரு உறுதியான சாதனை. பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் கூட கொரோனா இந்தியாவை விட சிறப்பாக கையாண்டன" என்று ராகுல் காந்தி விளக்கப்படத்துடன் டுவீட் செய்துள்ளார்.

Next Story